“உண்மையிலேயே நீஈஈஈஈண்ட கதை”
ரொம்ப நாளைக்கு முன்னாடி..... அப்போ எங்க ஊர் கவுர்மெண்ட் ஸ்கூலில் நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். (ஹி...ஹி.. இப்போவும் அவ்வளவுதான் படிப்பு). உண்மையிலேயே ஒரு நல்ல வாத்தியார் அங்க இருந்தார். எங்களுக்கு சயின்ஸ் பாடம் எடுப்பார்.
அவர்கிட்ட ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. தினமும் அவர் வகுப்பில் பாடம் நடத்த தொடங்குவதற்கு முன் பசங்களோட கவனம் சிதறாம இருக்கனும் என்பதற்காக ஒரு கதை சொல்வார். பெரும்பாலும் அறிவுரை சொல்ற மாதிரிதான் இருக்கும். கொஞ்சம் நாள் கழித்து கடைசி பென்ச் பசங்க (நாங்க தாங்க) வாத்தியார் கதை சொல்லி முடித்ததும், சார் கதை ரொம்ப நல்லா இருந்தது சார்.... இன்னொரு கதை சொல்லுங்க என்போம். வாத்தியாரும், அவரு மனநிலை நல்லா இருந்தா இன்னொரு கதை சொல்வாரு. அப்டி இல்லன்னா இன்னைக்கு இவ்வளவு கதை போதும் புத்தகத்த எடுங்க என்று சொல்லி பாடத்த நடத்த ஆரம்பித்து விடுவார்.
இந்த மாதிரி போய்க்கொண்டிருந்த போது, வாத்தியார் எங்களோட உண்மையான நோக்கத்த (அதாங்க.... கதை சொல்ல வெச்சே பீரியட ஓட்டிடலாம் என்கிற திட்டத்தைத்தான்) கண்டுபிடித்துவிட்டிருப்பார் போல. வழக்கம்போல அவர் கதை சொல்லி முடித்ததும், சார்..... இன்னொரு பெரிய கதை சொல்லுங்க என்றோம். அவரும், சரிங்கடா கதையை கேளுங்க என்று சொல்ல ஆரம்பித்தார். என்ன நீங்களும் ரெடிதானே? “ஒரு ஊருல ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு பண்ணையாருக்கு சொந்தமா ஒரு வயல் இருந்ததாம். (பண்ணையாருக்கு ஒரே ஒரு வயல்தான் சொந்தமான்னு சோசலிஸமெல்லாம் பேசப்படாது) அந்த வயலில நெல்லு நடவு செஞ்சிருந்தாங்களாம். அந்த நெற்பயிரெல்லாம் நல்லா வௌஞ்சி நெல்மணிகளோட கதிர் நெறைய இருந்திச்சாம். அந்த ஊருல நெறைய சிட்டுக் குருவிங்களாம் இருந்திச்சாம். அந்த சிட்டுக் குருவிங்களாம் வயலில நெல்லு வௌஞ்சிருக்கறத தெரிஞ்சிக்கிட்டு அந்த வயலுக்கு வந்திச்சாம். முதல் சிட்டுக் குருவி போய் ஒரு நெல்மணியை கொத்திக்கொண்டு போயிடுச்சாம். அப்புறம் இரண்டாவது சிட்டுக் குருவி போய்
இரண்டாவது நெல்மணியை கொத்திக்கொண்டு
போயிடுச்சாம். அப்புறம் மூன்றாவது சிட்டுக் குருவி போய்
மூன்றாவது நெல்மணியை கொத்திக்கொண்டு
போயிடுச்சாம். பிறகு நான்காவது சிட்டுக் குருவி போய்
நான்காவது நெல்மணியை கொத்திக்கொண்டு போயிடுச்சாம்...........” இப்படி சொல்லிக்கொண்டு போய்க்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏ........... இருந்தார். அய்யய்யோ சார் கதை போதும் சார் என்று நாங்கள் வாத்தியாரை நிறுத்தினோம். அத்தோடு சரி.... நாங்கள் அவரை “இன்னொரு... கதை... சொல்லுங்க... ” என்று அதன்பிறகு கேட்கவேயில்லை. உங்களுக்கு கேட்கனும்னு தோன்றுதா?

பரவாயில்லையே, ஆறு மாசத்துக்கு ஒரு பதிவு போட்டுடறீங்களே, ரொம்ப சுறுசுறுப்புத்தான் போங்க?
பதிலளிநீக்குஉங்களை நம்பி நான் பாலோயர் வேற ஆகிட்டேன்.
"பரவாயில்லையே, ஆறு மாசத்துக்கு ஒரு பதிவு போட்டுடறீங்களே, ரொம்ப சுறுசுறுப்புத்தான் போங்க?
பதிலளிநீக்குஉங்களை நம்பி நான் பாலோயர் வேற ஆகிட்டேன்."
ஐயா பழனி.கந்தசாமிக்கு வணக்கம் நீங்கள் இந்த பதிவின் மறை பொருளை சரியாக புரிந்து கொள்ளவில்லை, பதிவின் இறுதி வரியை இப்படி படிக்கவும்.
"உங்களுக்கு கதை கேட்கனும்னு தோன்றுதா?"
உங்களுக்கு புதிய பதிவு கேட்கனும்னு தோன்றுதா?
just for fun sir don't mistake !
ஊர் சுற்றுவதற்கே நேரம் போதவில்லையாதலால் அப்பப்போ பதிகிறேன். இனிமேல் அடிக்கடி... அதாவது 175 நாட்களுக்குள்ளாவது ஒரு பதிவு அளித்துவிடுகிறேன் ஐயா.
பதிலளிநீக்கு