செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சரக்கு விற்ற பணம்


சரக்கு விற்ற பணம்

டாஸ்மாக்கில் குடித்து உயிரை விட்டவன் மனைவி
சீரியல் பார்த்து அழுகிறாள்
இலவச டிவியில்





பட்டுச் செல்லம்





“போயிட்டுறம்ப்பா” என்று
வழக்கம் போல பள்ளிக்கு செல்லும்போது
கையசைத்துச் செல்லும் என் மகள்,
இன்றைய நாளும் இனிய நாள்.






மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.