வியாழன், 10 மார்ச், 2011

ஊர் ஞாபகம்


ஊர் ஞாபகம்

அப்பாவிடம் கோபித்துக்கொண்டு  சாலையோர
    சிறு மரத்தினடியில் நின்று அடம்பிடிக்கும் யாரோ ஒரு சிறுவன்

சூட் அணிந்த அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு
     மின்படியில் அமைதியாக இறங்கும் யாரோ ஒரு சிறுமி

கையில் இரண்டு பெரிய ஷாப்பிங் பைகளுடன்
   மெட்ரோவில் சிரமத்துடன் நிற்கும் யாரோ ஒரு மூதாட்டி

தள்ளாத வயதிலும் தன் பேரனுக்கு
    மகிழ்வுடன் ஐஸ்கேண்டி வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒரு பெரியவர்

விமான நிலையத்தில் வந்திறங்கிய உறவைக்
   கட்டியணைத்து மகிழும் யாரோ சொந்தங்கள்

கூட்டமாக பூங்காவில் அமர்ந்து
   அரட்டையடிக்கும் யாரோ நண்பர்கள்

மாறாக, சேர்ந்தார்போல் இரண்டு நாட்கள் கூட
   ஒரே உணவகத்தில் சாப்பிடமுடியாத ஏதோ உணவு

எல்லாம் தொடர்பற்ற நிகழ்வுகள் - ஆனாலும்
  ஏனோ எனக்கு ஊர் ஞாபகம்


நிதர்சனம்


நிதர்சனம்

வெற்றுடலத்தில் ஒண்டிக்கொண்டிருக்கும் தமிழனுக்கு
அந்த ஒற்றைவரிச்சொல் உயிரளிக்கிறது
"தலைவன் இருக்கிறான்"



மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.