ஊர் ஞாபகம்
அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சாலையோர
சிறு மரத்தினடியில் நின்று அடம்பிடிக்கும் யாரோ ஒரு சிறுவன்
சூட் அணிந்த அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு
மின்படியில் அமைதியாக இறங்கும் யாரோ ஒரு சிறுமி
கையில் இரண்டு பெரிய ஷாப்பிங் பைகளுடன்
மெட்ரோவில் சிரமத்துடன் நிற்கும் யாரோ ஒரு மூதாட்டி
தள்ளாத வயதிலும் தன் பேரனுக்கு
மகிழ்வுடன் ஐஸ்கேண்டி வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒரு பெரியவர்
விமான நிலையத்தில் வந்திறங்கிய உறவைக்
கட்டியணைத்து மகிழும் யாரோ சொந்தங்கள்
கூட்டமாக பூங்காவில் அமர்ந்து
அரட்டையடிக்கும் யாரோ நண்பர்கள்
மாறாக, சேர்ந்தார்போல் இரண்டு நாட்கள் கூட
ஒரே உணவகத்தில் சாப்பிடமுடியாத ஏதோ உணவு
எல்லாம் தொடர்பற்ற நிகழ்வுகள் - ஆனாலும்
ஏனோ எனக்கு ஊர் ஞாபகம்

அழகான நினைவுகள்... ஆழமான நினைவுகள் கூட...
பதிலளிநீக்குசொர்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா . . . .
பதிலளிநீக்குபிளாக் பேக் வட்டம் (ரவுன்டு) நன்றாக இருக்கு ...
அடுத்த பதிவு எப்போ ?
உலக ஞாபகம்
பதிலளிநீக்குமுதலாம் உலக வார்
இரண்டாம் உலக வார்
முடிவு தெரியும் - ஆனா
என்று முடியும் நம் ஊர் மக்+வார் = ???